என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போளூர் வாலிபர் கைது
நீங்கள் தேடியது "போளூர் வாலிபர் கைது"
திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக போளூர் வாலிபர் கைது செய்யப்பட்டார். செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி அலிபிரி பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வன விலங்கு பூங்கா பகுதியில் ஒரு கார் நிற்பதை கண்ட செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த காரை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர்.
போலீசாரை கண்ட மர்ம நபர் காரை வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். காரில் இருந்த மர்ம நபர் காரை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். காரை பறிமுதல் செய்த போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலூகா மங்காபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பது தெரியவந்தது.
மேலும் அந்த நபர் சபரி மலை செல்ல மாலை அணிந்து இருந்தார். போலீசார் காரை சோதனை செய்த போது காரின் பின் பகுதியில் செம்மர கட்டைகள் அடுக்கி வைத்திருந்தனர். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட ஆந்திர மாநில பதிவெண் போர்டுகளும் இருந்தது. செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

×

X